♻️💢♻️💢♻️💢♻️💢♻️💢♻️
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*மார்ச் 06*
♻️💢♻️💢♻️💢♻️💢♻️💢♻️
🌍 *இன்றைய நித்தியகடன்*
🌍 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.
🌍 *இன்றைய சாதகம்*
🌍 சனிக்கிழமை
காலை:- சாந்தி தவம்
மாலை:- நித்தியானந்ததவம்.
🌍 *இன்றைய நற்சிந்தனை*
🌍 புற காரணிகளையும், அக காரணிகளையும் ஒன்றுபடுத்தி அதனுடைய உட்தன்மையை, புரிந்து கொண்டு விட்டால் அது தான் ஞானம். உங்கள் வாழ்க்கையை தீர்மானிப்பது இந்த காரணிகள்தான். காரணிகளை அலட்சியம் செய்யாதீர்கள், எதிர்கால வாழ்க்கையை இந்த காரணிகளே உருவாக்குகிறது. எதிர்கால வாழ்க்கையாக இந்த காரணிகளே விஸ்வரூபம் எடுக்கிறது சூழ்நிலைக்கு தக்கவாறு.
🌍 *இன்றைய தற்சோதனை*
🌍 ஒவ்வொரு விதையும் முளைப்பதற்கு முயற்சி செய்கிறது. இந்த முயற்சிக்கு இயற்கை என்ற பேராற்றல் பேருதவியாக அமைகிறது. இது போன்றே நமக்கு இருக்கக்கூடிய ஞானம் என்னும் விதையை வளர்ப்பதற்கு "தற்சோதனை" என்ற இயற்கை வளத்தை பயன்படுத்துவோம்.
🌍 *இன்றைய பண்புப்பயிற்சி*
🌍 மனதிற்கு பல்வேறு முகங்கள் உண்டு. மனதை பயன்படுத்தி எதை வேண்டுமானாலும், நீங்கள் உங்களுடையதாக மாற்றிக் கொள்ளலாம். மனதை பண்படுத்தாமல் அப்படியே விட்டு விட்டால், அது காற்றாற்று வெள்ளம் போல அனைத்தையும் உங்களிடம் கொண்டு வந்து சேர்த்துவிடும். அதில் தான் நீங்கள் வாழ வேண்டும் என்று கட்டாயப்படுத்தும், நிர்ப்பந்தப்படுத்தும். இது நாள் வரை நீங்கள் இம்முறையில் தான், வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். மனதை நீங்களாக முறைப்படுத்தினால் அதை ஞானத்திற்கு உயர்த்தலாம். மனதை சிறந்த முறையில் பக்குவப்படுத்திக் கொள்ளுங்கள். பக்குவப்பட்ட மனதில் தான் ஞானஅறிவு பெருகும். வாழ்க வளமுடன்...
🌍 *இன்றைய மூலிகை*
🌍 *கருஞ்சீரகம்* தேவேயான பொருள் கருஞ்சீரகம் – 50gm,
வெந்தயம் – 250gm,
ஓமம் – 100gm
🌍 மேலே உள்ள 3 பொருட்களையும் சுத்தம் செய்து அதை தனித்தனியாக கருகாமல் வறுத்து, தூள் செய்து ஒன்றாக கலந்து ஒரு கண்ணாடி குடுவையில் வைத்துக்கொள்ள வேண்டும். இக் கலவையை ஒரு ஸ்பூன் அளவு இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் உட்கொள்ள வேண்டும்,இதை சாப்பிட்ட பின்பு எந்த உணவும் சாப்பிடக் கூடாது.
🌍 தினசரி இந்த கலவையை சாப்பிடுவதால் நம் உடலில் தேங்கி இருக்கும் அனைத்து நச்சு கழிவுகளும் மலம், சிறுநீர் மற்றும் வியர்வை மூலம் வெளியேற்றப்படுகிறது. தேவையான கொழுப்பு எரிக்கப்பட்டு தேவையற்ற கொழுப்பு நீக்கப்படுகிறது, இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சீரான இரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது.
🌍 நல்ல முடி வளர்ச்சி உண்டாகிறது, மலச்சிக்கல் நீங்குகிறது,
பெண்கள் சம்மந்தப்பட்ட நோய்கள் நீங்குகிறது. மருந்துகளின் பக்க விளைவுகள் நீக்கப்படுகிறது, ஆண், பெண் சம்மந்தமான பாலியல் பலவீனங்கள் நீக்கப்படுகிறது. நீரிழிவு நோய் கட்டுக்குள் வைக்க படுகிறது.
🌍 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
🌍 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🌍 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🌍 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment