நித்தியகடன் பிப்ரவரி 02 2021

🗾🐝🗾🐝🗾🐝🗾🐝🗾🐝🗾

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*பிப்ரவரி 02*

🗾🐝🗾🐝🗾🐝🗾🐝🗾🐝🗾

🍵 *இன்றைய நித்தியகடன்*

🍵 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.

🍵 *இன்றைய சாதகம்*

🍵 செவ்வாய்கிழமை 
காலை:- துரியாதீததவம், மாலை:- இறைநிலை தவம்.

🍵 *இன்றைய நற்சிந்தனை*

🍵 ஒரு பாத்திரம் நிறைய ஏதேனும் ஒரு பொருளை நிரப்பி விட்டாலோ, அல்லது அந்த பாத்திரத்தை கவிழ்த்து வைத்துவிட்டாலோ, வேறு எதையும் அந்த பாத்திரத்துக்குள் வைக்க இயலாது. இதுபோல நம்முடைய மனதில் தேவையில்லாதவைகளை நிரப்பி வைத்து விட்டாலோ, அல்லது சுத்தமாக மனதை எதையுமே ஏற்றுக்கொள்ளாமல் இருந்துவிட்டாலோ, நம் வாழ்க்கை ஒரு வெறுமையாகவே இருக்கும். நமக்கு கிடைப்பதில் எதிலேயும் ஒரு நிறைவு இருக்காது.

🍵 *இன்றைய தற்சோதனை*

🍵 எதைக் கொண்டு நம் மனதை நிரப்ப வேண்டுமோ அதைக் கொண்டு நிரப்புங்கள். கோடிட்ட இடங்களை நிரப்புக? என்று பாடத்தில் நாம் படித்திருக்கிறோம். பொருத்தமில்லாத வாக்கியத்தை அதில் நிரப்பினால் அதற்கு மதிப்பெண் எதுவும் கிடைக்காது அல்லது நிரப்பாமல் அந்த இடத்தை வெற்றிடமாக விட்டுவிட்டாலும் மதிப்பெண் கிடைக்காது. அது போல தான் மனதில் சரியான பொருத்தமான எண்ணங்களை தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம‌். தற்சோதனை செய்து அவைகளை கண்டறிந்து தன்னிறைவோடு வாழ்வோம் நல்ல எண்ணங்களோடு.

🍵 *இன்றைய பண்புப்பயிற்சி*

🍵 எங்கேயோ, எதையோ தேடி அலைவது புலன் இயக்க மயக்கமாகும். உங்களிடமிருக்கக் கூடிய உயிரை, மனதை, கருமையத்தை தூய்மை செய்து கொண்டு அங்கேயே தேடுங்கள். உங்களுக்கு தேவையான அனைத்தும் அங்கேயே இருப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த உண்மையை உணர்ந்து கொள்ளும், ஏற்றுக்கொள்ளும் பண்பில் உயர்வு காண்போம். உள்ளதை உள்ளவாறு உணரும் பண்பே மனிதன் வாழ வேண்டிய பண்பாகும் வாழ்க வளமுடன்...

🍵 *இன்றைய மூலிகை*

🍵 *சீரகம்* இரண்டுடம்லர் தண்ணீரில் ஒரு சிட்டிகை சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.

🍵 இது இரத்தவிருத்தி மற்றும் இரத்த சுத்திகரிப்பு செய்யும், ஆழ்ந்த உறக்கம் வரும். இளநரை, கண், வயிறு எரிவு நீங்கும். வாய் துர்நாற்றம், பற்சிதைவு நீங்கும். ரத்த மூலம், வயிற்று வலி, இருமல், விக்கல் போகும். பித்தம் அகலும், அஜீரணம், மந்தம் நீங்கும். 

🍵 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

🍵 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

🍵 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

🍵 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments