நித்தியகடன் ஜனவரி 31 2021

https://youtu.be/jRtcBSBLwfI
♻️🍁♻️🍁♻️🍁♻️🍁♻️🍁♻️

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*ஜனவரி 31*

♻️🍁♻️🍁♻️🍁♻️🍁♻️🍁♻️

🎑 *இன்றைய நித்தியகடன்*

🎑 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.

🎑 *இன்றைய சாதகம்*

🎑 ஞாயிற்றுகிழமை 
காலை:- பஞ்சபூத நவக்கிரக தவம் 
மாலை:- இறைநிலை தவம்.

🎑 *இன்றைய நற்சிந்தனை*

🎑 உயிர் விவசாயத்தை காப்போம், வளர்ப்போம், வாழ்த்தி வரவேற்போம். ரசாயனம் இல்லாதது உயிர் விவசாயம் இதனை வாழ்த்தி வரவேற்போம். இந்த உயிர் விவசாயம் எவ்வளவு அவசியம் என்பதை உணர்வோமாக. சத்தான உயிரோடு இருக்கும் உணவை உண்ணும் போது நாமும் சத்தோடும், உயிரோடும் வாழலாம். உணவு மனிதர்களின் ஆன்மீக முன்னேற்றத்தில் பெரிய பங்கு வகிக்கிறது.

🎑 *இன்றைய தற்சோதனை*

🎑 ஆரோக்கியமான உடலுக்கு ஆரோக்கியமான உணவு அவசியம். ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஆரோக்கியமான செயல்களும் சிந்தனையும் அவசியம். ஆரோக்கியமான செயல் தனக்கோ, பிறருக்கோ, தற்காலத்திலோ, பிற்காலத்திலோ, உடலுக்கோ, மனதிற்கோ, தன்னுடைய எண்ணம், சொல், செயல் இவைகள் வழியாக துன்பங்களை செய்துகொள்ளாமல் வாழ்வதே ஆகும்.

🎑 *இன்றைய பண்புப்பயிற்சி*

🎑 உங்களுக்கு நீங்களே துன்பம் செய்து கொள்ளாமல் வாழும் வாழ்க்கை முறை ஒன்றை தேர்வு செய்து வாழுங்கள். நீங்கள் துன்பப்பட்டாலோ, துயரம் அடைந்தாலோ உங்களுக்கே தெரியாமல் நீங்கள், உங்களை சார்ந்தவர்களுக்கும் நீங்கள் அதையே செய்து விடுவீர்கள். எல்லாவற்றையும் சீர்தூக்கிப் பார்த்து உயிருக்கு எது உகந்ததோ அதையே வாழ்க்கையாக வாழும் பண்பில் உயர வேண்டும். மனிதன் என்கிற அடையாளம் அவர்கள் வாழும் பண்பினால் அமைகிறது, என்பதை ஒரு நாளும் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. நல்ல பண்பே உங்களுடைய அடையாளமாகும். வாழ்க வளமுடன்....

🎑 *இன்றைய மூலிகை*

🎑 *துளசி* தேவையான பொருட்கள்
துளசி இலை – 1/2 கப்
தண்ணீர் – 2 கப்
டீத்தூள் – 2 டீஸ்பூன்
நாட்டு சர்கரை – தேவையான அளவு

🎑 *செய்முறை*
துளசி இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு பின் அடுப்பைக் குறைத்து 3 முதல் 4 நிமிடம் வரை விடவும்.
பின் டீத்தூள், நாட்டு சர்கரையை போட்டு 2 நிமிடங்கள் கழித்து வடிகட்டவும். துளசி தேநீரைதயார்.

🎑 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

🎑 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

🎑 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

🎑 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments