நித்தியகடன் ஜனவரி 15 2021

🚥🚧🚥🚧🚥🚧🚥🚧🚥🚧🚥

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*ஜனவரி 15*

🚥🚧🚥🚧🚥🚧🚥🚧🚥🚧🚥

👣 *இன்றைய நித்தியகடன்*

👣 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.

👣 *இன்றைய சாதகம்*

👣 வெள்ளிகிழமை 
காலை, மாலை இரண்டு 
வேளையும் சாந்தி தவம்.

👣 *இன்றைய நற்சிந்தனை*

👣 நாம் வாழக்கூடிய இந்த பூமியில் நல்ல செயல்களும் சிந்தனைகளும் வளர்வதற்கு நிறைய தடைகள் இருக்கின்றன. அவைகள் அனைத்தையும் தாண்டி நாம் நல்ல எண்ணங்களையும் செயல்களையும் நமக்கு உள்ளும் புறமும் வளர்த்துக் கொள்ள வேண்டிய காலகட்டத்திலும் கட்டாயத்திலும் இருக்கிறோம். தயவு செய்து எல்லாவற்றையும் தொலைநோக்கி சிந்தித்து புரிந்துகொள்ள முயற்சி செய்வோமாக. நமக்கு இறை அருளும் குரு அருளும் பாதுகாப்பாக இருக்கும். அதனோடு நாம் வாழ்த்தும் வாழ்த்து அலையானது நம் வாழ்க்கையை தற்காத்துக் கொள்ளக்கூடிய அருள் காப்பாக உருவாகும். அது மட்டுமின்றி...

👣 *இன்றைய தற்சோதனை*

👣 வாழ்த்து ஒன்றுதான் நம்முடைய எதிர்காலத்தில் இருக்கக்கூடிய எதிர்மறையான தன்மைகளை, இடர்பாடுகளை, இன்னல்களை மாற்றி அமைப்பதற்கு நமக்கு இருக்கும் ஒரே வாய்ப்பாகும். நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்த உலகத்தில், நாம் வாழும் வாழ்க்கையை எங்கோ இருந்து எவரொருவரோ முடிவு செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களெல்லாம் நல்லோர் ஆகட்டும், அவர்களுடைய கருமையங்கெல்லாம் தூய்மை பெறட்டும், என்று இவ்வுலகத்தையும் இவ்வுலக மக்களையும் வாழ்த்துவோம். எதிர்கால வாழ்க்கை ஒவ்வொரு தனிமனிதனுக்கும் பாதுகாப்பு, அமைதி, மனநிறைவு நிறைந்து இருப்பதாக அமையட்டும். 

👣 *இன்றைய பண்புப்பயிற்சி*

👣 பல நூற்றாண்டு காலமாக நடந்து கொண்டிருக்கும் கொடுமை இது. இந்த கொடுமை சரி செய்வதற்கு இன்னும் சில நூற்றாண்டுகள் ஆகத்தான் செய்யும். இருந்தபோதும் நம்பிக்கையோடு இருந்து நாம் இன்று இந்த முயற்சியில் நம்மை ஆழமாக இணைத்துக் கொண்டு தான் ஆக வேண்டும். மகரிஷி கொடுத்த இந்த வாழ்க்கை முறை உலகம் முழுவதும் பரவுவதற்கு இன்று நாம் நம்மாலான எல்லாவகையான செயல்களையும் செய்வோம். இதற்கான முதல் அடியாக வாழ்த்தினை பயன்படுத்துவோம். இந்த வாழ்த்தானது நம் உயிரிலிருந்து முளைத்து எழ வேண்டும். வாழ்க வளமுடன்...

👣 *இன்றைய மூலிகை*

👣 *நிலவேம்பு குடிநீர்* தேவையான பொருள் தண்ணீர் -200ml
நலவேம்பு ஒரு டேபில் ஸ்பூன்.

👣 செய்முறை:- நிலவேம்பு ஒரு டேபில் ஸ்பூனை. 200ml தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்கவும் 100ml ஆகும் அளவிற்கு கொதிக்க விடவும்.

👣 *முக்கிய குறிப்பு:-* காலையில் தயாரித்து. காலை வெறும்
வயிற்றில் பருகவும். மூன்று வயது குழந்தைகளுக்கு 50ml பெரியவர்களுக்கு 100ml
நோய் எதிர்புசக்தி அதிகரிக்கும்.
(வைரஸ் காய்ச்சல் குணமாகும்)

👣 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

👣 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

👣 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

👣 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments