🕸️🌐🕸️🌐🕸️🌐🕸️🌐🕸️🌐🕸️
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*ஜனவரி 12*
🕸️🌐🕸️🌐🕸️🌐🕸️🌐🕸️🌐🕸️
🌠 *இன்றைய நித்தியகடன்*
🌠 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.
🌠 *இன்றைய சாதகம்*
🌠 செவ்வாய்கிழமை இன்று அமாவாசை காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம்.
🌠 *இன்றைய நற்சிந்தனை*
🌠 இந்த பூமியில் தான் உப்பும் கிடைக்கிறது, வைரமும் கிடைக்கிறது. பூமியின் மேற்பரப்பில் சேருகின்ற படிமம் உப்பாகவும், பல்வேறு தாதுக்களாகவும், பூமியின் அடி ஆழத்தில் சேருகின்ற படிமம் வைரமாகவும், பல்வேறு கற்களாகவும் உருபெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு பல்வேறு ரசாயனமும், வெப்பமும், காலமும் தேவைப்படுகின்றன. எந்த ஒரு நிகழ்ச்சியும் பூமியின் மேற்பரப்பிலும் சரி அல்லது அடி ஆழத்திலும் சரி, இந்த பூமியில் வாழும் உயிர்களின் வாழ்க்கையிலும் சரி, உடனடியாக எந்த ஒரு மாற்றமும் நடை பெறுவது இல்லை. அது அதற்கு தகுந்த காலத்தை எடுத்துக்கொள்கிறது.
🌠 *இன்றைய தற்சோதனை*
🌠 நம்முடைய உடலிலும் இதே நீதி பொருந்தும். எந்த ஒரு மாற்றமும் காலத்தால் நிச்சயமாக நிகழும், அதுவரையில் நாம் பொறுமையோடு இருந்து பயிற்சிகளை நம்பிக்கையோடு செய்து, சிறப்பான அந்த கால நிலையை வாழ்த்திக்கொண்டே வாழ்வோம். செயலுக்குத் தக்க விளைவு அமைந்தே தீரும், ஒரு நாளும் ஒரு பொழுதும் இது மாறப்போவது இல்லை. நம்பிக்கையோடு திட்டமிட்டுக் கொண்டு நம்முடைய வாழ்வை நிதானமாக முயற்சிகளை செய்து கொண்டே இருப்போம்.
🌠 *இன்றைய பண்புப்பயிற்சி*
🌠 செயலுக்குத் தக்க விளைவு என்பது நிச்சயமாக உண்டு. இந்த செயலுக்கு என்ன விளைவு என்பது அவரவர் வினைத் தன்மையைப் பொறுத்து அமைகிறது. இந்த நீதியை உணர்ந்து நல்ல செயல்களை, அதாவது ஞானச் செயல்களை செய்து, ஞான விளைவுகளான அறிவுசார்ந்த சிந்தனைகளையும், செயல்களையும் உருவாக்குவோம். புதியதோர் பண்பாட்டை பறை சாற்றுவோம். வாழ்க வளமுடன்...
🌠 *இன்றைய மூலிகை*
🌠 *சீரகம்* இரண்டுடம்லர் தண்ணீரில் ஒரு சிட்டிகை சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.
🌠 இது இரத்தவிருத்தி மற்றும் இரத்த சுத்திகரிப்பு செய்யும், ஆழ்ந்த உறக்கம் வரும். இளநரை, கண், வயிறு எரிவு நீங்கும். வாய் துர்நாற்றம், பற்சிதைவு நீங்கும். ரத்த மூலம், வயிற்று வலி, இருமல், விக்கல் போகும். பித்தம் அகலும், அஜீரணம், மந்தம் நீங்கும்.
🌠 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
🌠 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🌠 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🌠 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment