🐚🍒🐚🍒🐚🍒🐚🍒🐚🍒🐚
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*டிசம்பர் 16*
🐚🍒🐚🍒🐚🍒🐚🍒🐚🍒🐚
🏞️ *இன்றைய நித்தியகடன்*
🏞️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.
🏞️ *இன்றைய சாதகம்*
🏞️ புதன்கிழமை
காலை:- தீபப்பயிற்சி,
ஒன்பது மையம்,
மாலை:- நித்யானந்தம்.
🏞️ *இன்றைய நற்சிந்தனை*
🏞️ நமக்குள்ளிருக்கும் அறியாமை,
விலங்கினத்தன்மை, தேவையில்லாத பழக்க, வழக்கம் அனைத்தையும் நாசம் செய்ய வேண்டும். படிக்கும் புத்தகமும், மேற்கொள்ளும் பயிற்சியும் இந்த விளைவைத் தருமேயானால் அது நமக்கு கிடைத்த வரம். புலன் உணர்ச்சிகளுக்குள் மயங்கி சிக்கி, மீளமுடியாமல் புதைந்து கிடக்கும் இந்த மனோநிலையில் இருந்து நம்மை பாதுகாக்கக் கூடிய பயிற்சி முறையை, தாற்சோதனை மூலமாக அடையாளம் கண்டு கொள்ள முடியும்.
🏞️ *இன்றைய தற்சோதனை*
🏞️ அத்தகைய பயிற்சி முறையால் நமக்குள் இருக்கும் நஞ்சு கழுவிக்களையப்பட வேண்டும். இந்த சிறப்புகள் எல்லாம் ஒன்றிணைந்து உள்ளடங்கியதே வேதாத்திரியம். விவேகமும் தேவை, வேகமும் தேவை. ஒன்றினால் ஒன்று பாதிப்படையாத வண்ணம், வழி முறையை வகுத்துக் கொள்ள வேண்டும். நமக்கு அமைந்த இறுதிவாய்ப்பு என்று எண்ணி வேதாத்திரியத்தோடு வாழ்க்கை பயணத்தை இனிதே துவங்குவோம்.
🏞️ *இன்றைய பண்புப்பயிற்சி*
🏞️ பயிற்சிமுறை கிடைத்தபின் எப்பாடுபட்டாவது அதனைதக்க வைத்துக் கொண்டு, விடாமுயற்சியோடு இருந்து முன்னேற வேண்டும். விசாலமான அறிவோடும், விஷயஞானத்தோடும் திட்டமிட்டுக் கொண்டு படிப்படியாக முன்னேறுவோம். வாழ்க வளமுடன்...
🏞️ *இன்றைய மூலிகை*
🏞️ *செம்பருத்தி* இரண்டு செம்பருத்தி பூ
(மகரந்தம், காம்பு நீக்கியது), இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய், இரண்டு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.
🏞️ இதனால் பெண்களுக்கு கர்ப்பப்பை வலுப்பெறும். மாதவிடாய் கோளாறு, வயிற்றுப்புண், வாய்ப்புண், நீர் சுருக்கு, இருதய நோய் போன்றவை நீங்கும். முகப்பொலிவு பெறும். இரத்த விருத்தி, இரத்த சுத்திகரிப்பு அதிகரிக்கும். உடல் பளபளப்பாகும்.. தலைமுடி உதிர்தல் நீங்கி, முடி நன்கு வளரும்.
🏞️ *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
🏞️ *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🏞️ *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🏞️ *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment