🎱♻️🎱♻️🎱♻️🎱♻️🎱♻️🎱
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*ஜனவரி 01*
🎱♻️🎱♻️🎱♻️🎱♻️🎱♻️🎱
🎨 *இன்றைய நித்தியகடன்*
🎨 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.
🎨 *இன்றைய சாதகம்*
🎨 வெள்ளிகிழமை
காலை, மாலை இரண்டு
வேளையும் சாந்தி தவம்.
🎨 *இன்றைய நற்சிந்தனை*
🎨 புதிய நம்பிக்கையோடும், புதிய உற்சாகத்தோடும், இன்றைய நாளை இனிதே துவங்குவோம். இனிவரும் காலங்கள் எல்லாம் அருட்பேராற்றல் இரவும், பகலும், எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும், எல்லாத் தொழில்களிலும், உறுதுணையாகவும், பாதுகாப்பாகவும், வழி நடத்துவதாகவும் அமையுமாக. நடந்து முடிந்தவற்றிலிருந்து அனுபவங்களை எடுத்துக்கொண்டு, இனி நடக்க வேண்டியவைகளுக்கு திட்டமிட்டுக் கொண்டு, நம் வாழ்வை சீராய் சிறப்பாய் இனிதே வாழ்வோம்.
🎨 *இன்றைய தற்சோதனை*
🎨 கால கரைசலின் விளைவைத்தான் நாம் அனுபவமாக பெறுகிறோம். கால ஓட்டத்தோடு தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டவர் யாரோ, அவர் காலத்தை பயன்படுத்தி தன்னுடைய வாழ்க்கையில் வெற்றி பெற்றவராக உலகத்தால் அங்கீகரிக்கப்படுகிறார். காலத்தின் நிலை மாற்றங்களுக்கு ஏற்ப இறை நீதியில் இருந்து சற்றும் விலகி விடாமல் வாழ்வதற்கு முயற்சி செய்யும்போது, அதற்கு உறுதுணையாக ஏற்றதொரு நல்வாய்ப்பாக நமக்கு அமைந்து இருப்பது தான் வேதாத்திரியம்.
🎨 *இன்றைய பண்புப்பயிற்சி*
🎨 இந்த சாதனை மார்க்கத்தை நாம் சரியாக பயன்படுத்திக் கொண்டு காலநிலை மாற்றங்களை சுலபமாக எதிர்கொள்ள முடியும். சந்தர்ப்ப சூழ்நிலைகள் எப்படி மாறினாலும் அவற்றிலெல்லாம் இருந்து நம்மை நாம் தற்காத்துக் கொள்ள முடியும். அத்தகையதொரு சிறப்பான தற்காப்புக் கலையாகும் வேதாத்திரியம். செயலுக்குத் தக்க விளைவு இறை நீதியின் அடிப்படையில் வேதாத்திரியத்தின் பயிற்சிகளை நாம் நாள் தவறாமல் செய்யும் பொழுது, தெளிந்த சிந்தனை ஓட்டமும் செயல்திறனும் இயல்பாக நமக்குள் அமைந்துவிடுகிறது. வாழ்க வளமுடன்...
🎨 *இன்றைய மூலிகை*
🎨 *நிலவேம்பு குடிநீர்* தேவையான பொருள் தண்ணீர் -200ml
நலவேம்பு ஒரு டேபில் ஸ்பூன்.
🎨 செய்முறை:- நிலவேம்பு ஒரு டேபில் ஸ்பூனை. 200ml தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்கவும் 100ml ஆகும் அளவிற்கு கொதிக்க விடவும்.
🎨 *முக்கிய குறிப்பு:-* காலையில் தயாரித்து. காலை வெறும்
வயிற்றில் பருகவும். மூன்று வயது குழந்தைகளுக்கு 50ml பெரியவர்களுக்கு 100ml
நோய் எதிர்புசக்தி அதிகரிக்கும்.
(வைரஸ் காய்ச்சல் குணமாகும்)
🎨 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
🎨 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🎨 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🎨 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment