🍋🍥🍋🍥🍋🍥🍋🍥🍋🍥🍋
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*நவம்பர் 13*
🍋🍥🍋🍥🍋🍥🍋🍥🍋🍥🍋
🏀 *இன்றைய நித்தியகடன்*
🏀 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.
🏀 *இன்றைய சாதகம்*
🏀 வெள்ளிகிழமை
காலை, மாலை இரண்டு
வேளையும் சாந்தி தவம்.
🏀 *இன்றைய நற்சிந்தனை*
🏀 நம் உடல் செல்கள் மீது பூசப்பட்டு இருக்கக்கூடிய தீவினை பதிவுகளை, அகற்றிக்கொள்வதற்கான பயிற்சி முறைதான் எளிய முறை உடற்பயிற்சி. இந்த எளியமுறை உடற்பயிற்சியை நாள் தவறாமல் செய்யும் போது விலங்கின பதிவுகள் இயல்பாகவே அகற்றப்படுகிறது. உயிருக்கு பலம் கொடுக்கக்கூடிய காயகல்ப பயிற்சியை காலை மாலை செய்துவர உயிருக்கு வலிமையும் ஆற்றலும் பெறுகிறது. இந்த சக்திகளை கொண்டே மனம் தன்னுடைய நிலைப்பாட்டை உணருகிறது.
🏀 *இன்றைய தற்சோதனை*
🏀 எந்த ஒன்றையும் துல்லியமாக அளவிட்டு காட்டக்கூடிய தராசு போல, நம்முடைய மனதை அறிவோடு இணைத்துக்கொண்டு பாரபட்சமில்லாமல் சரியாக அளவிட்டு காட்டக்கூடிய, சிந்தனை திறனோடு வாழ்க்கையை உயர்ந்த நிலையில் வாழ வேண்டும். "தவம் செய்வார் தம் கருமம் செய்வார் மற்றெல்லாம் அவம் செய்வார் ஆசையுட் பட்டு" திருவள்ளுவர் இக் குறளில் ஆசைப்படும் மனம் எப்போதும் தன்னுடைய செயல்களை துல்லியமாக வைத்துக்கொள்ள முடியாது என்பதை அடிக்கோடிட்டு காட்டுகிறார்.
🏀 *இன்றைய பண்புப்பயிற்சி*
🏀 சூழ்நிலைகள் அப்புறமும் இப்புறமும் அசைந்து கொண்டே இருந்தாலும், தராசு முள் போல இருந்து நடுநிலையோடு வாழ்க்கையில் நான் இவ்வாறு இன்னதுதான் செய்யவேன், இன்னதுதான் செய்யவேண்டும், என்று சிந்தித்து அந்த கோட்பாடுகள் அனைத்தையும் வாழ்வியலோடு முழுமையாக இணைத்துக் கொள்ள வேண்டும். சீர்திருத்தம் இல்லாமல் எந்த ஒரு சிறப்பும் நமக்குள் பிறவாது என்பதை உணர்ந்து உய்யும் வகை தேடி உயர்வோம். வாழ்க வளமுடன்...
🏀 *இன்றைய மூலிகை*
🏀 *நிலவேம்பு குடிநீர்* தேவையான பொருள் தண்ணீர் -200ml
நலவேம்பு ஒரு டேபில் ஸ்பூன்.
🏀 செய்முறை:- நிலவேம்பு ஒரு டேபில் ஸ்பூனை. 200ml தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்கவும் 100ml ஆகும் அளவிற்கு கொதிக்க விடவும்.
🏀 *முக்கிய குறிப்பு:-* காலையில் தயாரித்து. காலை வெறும்
வயிற்றில் பருகவும். மூன்று வயது குழந்தைகளுக்கு 50ml பெரியவர்களுக்கு 100ml
நோய் எதிர்புசக்தி அதிகரிக்கும்.
(வைரஸ் காய்ச்சல் குணமாகும்)
🏀 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
🏀 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🏀 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🏀 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment