நித்தியகடன் நவம்பர் 10 2020

🎑⚾🎑⚾🎑⚾🎑⚾🎑⚾🎑

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*நவம்பர் 10*

🎑⚾🎑⚾🎑⚾🎑⚾🎑⚾🎑

🗾 *இன்றைய நித்தியகடன்*

🗾 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.

🗾 *இன்றைய சாதகம்*

🗾 செவ்வாய்கிழமை 
காலை:- துரியாதீததவம், மாலை:- இறைநிலை தவம்.

🗾 *இன்றைய நற்சிந்தனை*

🗾 மனம், உடல், உயிர், அறிவு, ஆற்றல், திறமை, நுட்பம், சிந்தனை, செயல் அனைத்தையும் நாம் எதற்கு தயார் படுத்துகிறோமோ, அதற்கு எல்லா வகையிலும் தன்னை தயார்படுத்திக் கொள்ளும், ஒரு அற்புதமான அமைப்பு இந்த மனித சரீரமும் அவர்களுடைய கருமையமும். ஞானத்திற்கே உருவானவர்கள் நாம். இப்பிரபஞ்சத்திலேயே தனித்துவம் வாய்ந்த பிறவி மனிதன் (the unique).

🗾 *இன்றைய தற்சோதனை*

🗾 உங்களை நீங்கள் ஞானத்திற்கு என்று தயார்படுத்திக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். எந்தவகையிலும் அலட்சியம் செய்யாமல் உங்களை சரியானதொரு ஞான நிலைக்கு தயார்படுத்திக் கொள்ளுங்கள். உங்களால் முடியாது என்றால் அது எவராலும் முடியாது என்றே பொருளாகும். ஏனெனில் நம்மிடம் மனவளக்கலை ஞான செயல் பயிற்சி இருக்கிறது.

🗾 *இன்றைய பண்புப்பயிற்சி*

🗾 செயலுக்குத் தக்க விளைவு இந்த பிரபஞ்சம் என்றபோது, ஞானத்திற்கு உரிய செயல்களை செய்தால் ஞானம் நிச்சயமாக விளையும். அனைவருக்குள்ளும் ஞானம் விதையாக இருக்கிறது. அது முளைப்பதற்கு முறையான வாய்ப்பு மட்டுமே தேவை. அதற்கான ஞான செயலை செய்வோம், அந்த ஞான செயல் என்னவெனில் நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம், நிதானமாக தற்சோதனை செய்வோம், ஞானத்தை முளைக்கச் செய்து கொண்டு ஞானமாய் வாழ்வோம். வாழ்க வளமுடன்...

🗾 *இன்றைய மூலிகை*

🗾 *சீரகம்* இரண்டுடம்லர் தண்ணீரில் ஒரு சிட்டிகை சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.

🗾 இது இரத்தவிருத்தி மற்றும் இரத்த சுத்திகரிப்பு செய்யும், ஆழ்ந்த உறக்கம் வரும். இளநரை, கண், வயிறு எரிவு நீங்கும். வாய் துர்நாற்றம், பற்சிதைவு நீங்கும். ரத்த மூலம், வயிற்று வலி, இருமல், விக்கல் போகும். பித்தம் அகலும், அஜீரணம், மந்தம் நீங்கும். 

🗾 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

🗾 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

🗾 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

🗾 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments