♻️🕸️♻️🕸️♻️🕸️♻️🕸️♻️🕸️♻️
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*அக்டோபர் 21*
♻️🕸️♻️🕸️♻️🕸️♻️🕸️♻️🕸️♻️
🎱 *இன்றைய நித்தியகடன்*
🎱 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.
🎱 *இன்றைய சாதகம்*
🎱 புதன்கிழமை
காலை:- தீபப்பயிற்சி,
ஒன்பது மையம்,
மாலை:- நித்யானந்தம்.
🎱 *இன்றைய நற்சிந்தனை*
🎱 கடைவீதிக்கு செல்லும்போது அங்கே எல்லா வகையான பொருட்களும் விற்பனைக்கு இருக்கும். நமக்கு தேவையானது எது என்பதை தேர்வு செய்து கொண்டு, அவற்றை மட்டுமே குறிக்கோளாக கொண்டு வாங்கி வரவேண்டும். தேவையில்லாத பொருள்களை எல்லாம் வாங்கி வீட்டை நிரப்பினோமனால், வசிப்பிடம் ஆனது மிகவும் குறுகியதாக மாறிவிடுகிறது. இந்த சிக்கலை ஏற்படுத்தி கொண்டது நாம்தான். இது மாதிரியான தவறுகளை செய்யக்கூடாது என்ற விழிப்பு நிலையோடு வாழவேண்டும்.
🎱 *இன்றைய தற்சோதனை*
🎱 நமக்கு தேவையான பொருளையும் தேர்ந்தெடுத்து, தரம் உணர்ந்து, தன்மை அறிந்து வாங்கி பயன்படுத்த வேண்டும். சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு நாம் அடிமையாகி விடாமல், மிகுந்த கவனத்தோடு இந்த சூழ்நிலைகளை பயன்படுத்த வேண்டும். மனதிற்கு மயக்கம் கொடுக்கக்கூடிய கவர்ச்சிகரமான பொருள்களும் நிகழ்ச்சிகளும் கடைத்தெருவில் ஏராளமாக இருக்கத்தான் செய்யும். நம்முடைய நோக்கத்தையும் சிந்தனையையும் தெளிவாக அமைத்துக் கொண்டால், எந்த ஒரு தாக்குதலானாலும் அதை சுலபமாக நாம் எதிர்கொள்ள முடியும்.
🎱 *இன்றைய பண்புப்பயிற்சி*
🎱 உயிருக்கு எது பொருத்தமானதோ, உயிருக்கு எது தேவையானதோ, அவைகளை மட்டும் நாம் நம்முடைய வாழ்க்கைத் தேவையாகவும், அவைகளை நிறைவேற்றி கொள்வதே வாழ்க்கை நெறியாகவும், பண்பாகவும் கொண்டு வாழும் எவரொருவருக்கும் எதிர்காலத்தில் நிகழ்காலத்தில் துன்பம் என்பது கிடையாது. புதியதொரு பண்பாடு என்பது உயிர் தேவையை நிறைவேற்றிக் கொண்டு வாழும் வாழ்க்கை முறையே ஆகும். இதில் நாமும் வாழ்ந்து நம்முடைய சந்ததிகளும் வாழ வழிவகை செய்வோம் வாழ்க வளமுடன்.
🎱 *இன்றைய மூலிகை*
🎱 *செம்பருத்தி* இரண்டு செம்பருத்தி பூ
(மகரந்தம், காம்பு நீக்கியது), இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய், இரண்டு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.
🎱 இதனால் பெண்களுக்கு கர்ப்பப்பை வலுப்பெறும். மாதவிடாய் கோளாறு, வயிற்றுப்புண், வாய்ப்புண், நீர் சுருக்கு, இருதய நோய் போன்றவை நீங்கும். முகப்பொலிவு பெறும். இரத்த விருத்தி, இரத்த சுத்திகரிப்பு அதிகரிக்கும். உடல் பளபளப்பாகும்.. தலைமுடி உதிர்தல் நீங்கி, முடி நன்கு வளரும்.
🎱 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
🎱 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🎱 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🎱 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment