நித்தியகடன் அக்டோபர் 16 2020

🎌🕸️🎌🕸️🎌🕸️🎌🕸️🎌🕸️🎌

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*அக்டோபர் 16*

🎌🕸️🎌🕸️🎌🕸️🎌🕸️🎌🕸️🎌

🔥 *இன்றைய நித்தியகடன்*

🔥 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.

🔥 *இன்றைய சாதகம்*

🔥 வெள்ளிகிழமை இன்று அமாவாசை காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம்.

🔥 *இன்றைய நற்சிந்தனை*

🔥 அகன்று பரந்து இருக்கக்கூடிய நிலப்பரப்பில் ஒரு விதையை நட்டு வளர்ப்பதற்கும். அதே தரத்தோடும், தன்மையோடும் உள்ள மற்றொரு விதையை ஒரு தொட்டியில் விதைத்து வளர்ப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் பல வகையிலும் இருக்கும். நாம் இதை விஞ்ஞான பூர்வமாகவே ஆய்வு செய்து மிகப்பெரிய அறிக்கையை சமர்ப்பிக்கலாம். அந்த அளவுக்கு மாற்றங்கள் அதில் வெளிப்படையாகவே காணப்படும். அது போலவே..‌.

🔥 *இன்றைய தற்சோதனை*

🔥 நம் மனமும் இதே நிலைபாட்டை உடையது தான். மனதை உடலளவு எல்லை கட்டி வைத்துக் கொண்டு எண்ணங்களையோ, வாழ்க்கையையோ, தன்னுடைய தேவைகளையோ பூர்த்தி செய்து கொள்வதற்கும், இந்த அகன்று விரிந்து இருக்கக்கூடிய பிரபஞ்சத்தில் மனதை விதைத்து அந்த நிலையிலிருந்து நம் எண்ணம், சொல், செயல், வாழ்க்கையையும் தன்னுடைய தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்வதற்கும், நிறைய வேறுபாடுகள் இருக்கிறது.

🔥 *இன்றைய பண்புப்பயிற்சி*

🔥 உடலளவு எல்லை கட்டி மனதில் அந்த அளவுதான் அறிவு செயல்படமுடியும் கற்றறிவு, பற்றறிவு, தொழிலறிவு, சுகபோக இன்பதுன்ப அறிவு இவைகள்தான் மேன்மை பெறும். பிரபஞ்ச அளவில் விரிந்து இயங்கக்கூடிய மனம் கற்றறிவு, தொழிலறிவு, விஞ்ஞான அறிவு, மெய்ஞான அறிவு எதையும் சிந்தித்து எவருக்கும் துன்பமும் ஏற்படாமல் தூய்மையான அறிவில் நிலைபெற்று வாழமுடியும். இப்பேறு பெறவே இம்மனித பிறவிக்கு நாம் பகுதி பெற்று வந்துள்ளோம். என்பதை மறவாமல் நாள், தவறாமல் பயிற்சி செய்வோம் இதன் பலனாய், விளைவாய், நிறைவாய் வாழ்வோம். வாழ்க வளமுடன்...

🔥 *இன்றைய மூலிகை*

🔥 *நிலவேம்பு குடிநீர்* தேவையான பொருள் தண்ணீர் -200ml
நலவேம்பு ஒரு டேபில் ஸ்பூன்.

🔥 செய்முறை:- நிலவேம்பு ஒரு டேபில் ஸ்பூனை. 200ml தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்கவும் 100ml ஆகும் அளவிற்கு கொதிக்க விடவும்.

🔥 *முக்கிய குறிப்பு:-* காலையில் தயாரித்து. காலை வெறும்
வயிற்றில் பருகவும். மூன்று வயது குழந்தைகளுக்கு 50ml பெரியவர்களுக்கு 100ml
நோய் எதிர்புசக்தி அதிகரிக்கும்.
(வைரஸ் காய்ச்சல் குணமாகும்)

🔥 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

🔥 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

🔥 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

🔥 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments