👣🌟👣🌟👣🌟👣🌟👣🌟👣
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*அக்டோபர் 07*
👣🌟👣🌟👣🌟👣🌟👣🌟👣
🍁 *இன்றைய நித்தியகடன்*
🍁 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.
🍁 *இன்றைய சாதகம்*
🍁 புதன்கிழமை
காலை:- தீபப்பயிற்சி,
ஒன்பது மையம்,
மாலை:- நித்யானந்தம்.
🍁 *இன்றைய நற்சிந்தனை*
🍁 இறைநிலையின் தன்மாற்றம் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாக நடந்து கொண்டிருக்கிறது. ஒன்றுக்கும் அதைத் தொடர்ந்து உருவான இன்னொன்றுக்கும், முற்றிலும் வேறுபாடு அதிகம் காணப்படும் உணரப்படும். இவை எல்லாம் அணுஅடுக்குகளின் அமைப்பினாலும், அணுக்களின் கூட்டு இயக்க செயலின் விளைவாக அமைந்தவையாகும். மூலகங்கள் மாறி மாறி இணைப்பு பெற்று தோற்ற பொருள்கள் அனைத்திலும், பல்வேறுவிதமான வியத்தகு செயல்களின் விளைவுகளாக எல்லாம் அமைந்துவிட்டன.
🍁 *இன்றைய தற்சோதனை*
🍁 இந்த பூமியில் பஞ்சபூதங்கள் ஒன்றை ஒன்று அரவணைத்து ஒருங்கிணைந்து இயங்குவதால் உயிரினங்கள் உருவானது. மற்ற வகை கோள்களில் இந்த பஞ்சபூத கூட்டமைப்பும் ஒருங்கிணைப்பும் முறையாக இல்லாத காரணத்தால், அங்கு உயிர்கள் உற்பத்தியாகும் வாய்ப்புகள் ஏதும் இல்லாமல் ஆயிற்று. இந்த இயற்கையின் அமைப்பை நாம் பாதுகாத்து பயனடைந்து அடுத்த தலைமுறைக்கும் பாதுகாப்பாக வழங்க வேண்டும். பூமியானது சகல ஜீவன்களுக்கும் பொதுவான ஒன்றாகும்.
🍁 *இன்றைய பண்புப்பயிற்சி*
🍁 இன்று வளர்ந்து தழைத்து நிற்கும் விஞ்ஞானத்தினால், நாம் அனைத்து இயற்கை நிகழ்ச்சிகளையும் சிலவற்றை புரிந்து கொண்டிருக்கிறோம். இன்னும் பலவாறான இயக்கங்களை புரிந்து கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். மறைபொருளாக உள்ள இயக்கங்களையும், செயல்களையும், விளைவுகளையும் மெய்ஞானத்தில் தன்னை ஆழமாக இணைத்துக் கொண்டால் தான், அதற்கான விளக்கங்களை தெளிவாக உள்ளுணர்வாக பெறமுடியும். வாழ்க வளமுடன்...
🍁 *இன்றைய மூலிகை*
🍁 *செம்பருத்தி* இரண்டு செம்பருத்தி பூ
(மகரந்தம், காம்பு நீக்கியது), இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய், இரண்டு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.
🍁 இதனால் பெண்களுக்கு கர்ப்பப்பை வலுப்பெறும். மாதவிடாய் கோளாறு, வயிற்றுப்புண், வாய்ப்புண், நீர் சுருக்கு, இருதய நோய் போன்றவை நீங்கும். முகப்பொலிவு பெறும். இரத்த விருத்தி, இரத்த சுத்திகரிப்பு அதிகரிக்கும். உடல் பளபளப்பாகும்.. தலைமுடி உதிர்தல் நீங்கி, முடி நன்கு வளரும்.
🍁 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
🍁 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🍁 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🍁 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment