நித்தியக்கடன் ஆகஸ்ட் 14 2020

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

ஆகஸ்ட் 14


🍒🍥🍒🍥🍒🍥🍒🍥🍒🍥🍒


🌋 இன்றைய நித்தியக்கடன்


🌋 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.


🌋 இன்றைய சாதகம்


🌋 வெள்ளிகிழமை 

காலை, மாலை இரண்டு 

வேளையும் சாந்தி தவம்.


🌋 இன்றைய நற்சிந்தனை


🌋 மனிதர்களாகிய நம்முடைய எண்ணம், சொல், செயல் இந்த மூன்றையும் ஒரே கோட்டில் அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதை வள்ளுவர் ஒரு குறளில் இவ்வாறு விளக்கியுள்ளார்கள் "பெயக்கண்டும் நஞ்சுஉண்டு அமைவர் நயத்தக்க 

நாகரிகம் வேண்டு பவர்" மேலும் இக்குறளில் நாகரிகம் என்றால் இதுதான் என்பதையும் கூறுகிறார்கள். முன்னுக்குப்பின் ஒன்றுக்கு ஒன்று முரண்பாடாக இருக்கிறதா! என்பதை நீங்களே உங்களை கண்காணித்து சோதித்து பார்த்துக் கொள்ளுங்கள்.


🌋 இன்றைய தற்சோதனை


🌋 மற்றவர்கள் நம்மிடம் உள்ள குறைகளை சுட்டிக்காட்டும் போது, அது பெரும்பாலும் யாருக்கும் பிடிப்பது இல்லை. தேவையில்லாமல் அவர்கள் மீது சினம் தான் எழும். ஆதலினால் உங்களை நீங்களே தற்சோதனை செய்து தகவமைத்துக் கொள்ளுங்கள். நம்முடைய மனித மெய்ஞான அறிவு உயர்வதற்கும் இந்த வழிமுறைதான் சிறந்ததாக இருக்கும். தன்னைத்தானே ஆய்வுக்கு உட்படுத்தி கொள்ளுதல், தெளிந்த நீரோடையாய் மனதை பராமரித்தல்...


🌋 இன்றைய பண்புப்பயிற்சி


🌋 உடல் இயக்கம், மன இயக்கம், அறிவு இயக்கம் இந்த இயக்கங்கள் அனைத்தையும் நலமுற காத்தும், மென்மேலும் வளர்ச்சி பெறும் வகையில் பராமரித்தலும் மனித அறிவு உயர்வுக்கு மிகவும் அவசியமாகும். இந்த பண்பில் நாம் உயர்வு பெற பெற நமக்கு உள்ளுணர்வு அதிகரிக்கும். மறைபொருள் விளக்கங்கள் தெளிவாக புரியும். தனக்கும், பிறருக்கும், துன்பம் இல்லாமல் வாழும் முறையை கடைபிடித்து அதன்பின் வாழத் துவங்குவோம். இந்த சிறப்புமிக்க பண்பில் உயர்ந்து சிறந்து நாமும் நம் குடும்பமும் விளங்குவோமாக... வாழ்க வளமுடன்....


🌋 இன்றைய மூலிகை


🌋 நிலவேம்பு குடிநீர் தேவையான பொருள் தண்ணீர் -200ml

நலவேம்பு ஒரு டேபில் ஸ்பூன்.


🌋 செய்முறை:- நிலவேம்பு ஒரு டேபில் ஸ்பூனை. 200ml தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்கவும் 100ml ஆகும் அளவிற்கு கொதிக்க விடவும்.


🌋 முக்கிய குறிப்பு:- காலையில் தயாரித்து. காலை வெறும்

வயிற்றில் பருகவும். மூன்று வயது குழந்தைகளுக்கு 50ml பெரியவர்களுக்கு 100ml

நோய் எதிர்புசக்தி அதிகரிக்கும்.

(வைரஸ் காய்ச்சல் குணமாகும்)


🌋 புகுவினையின் மீது கவனம் வைப்போம் (ஆகாம்யம்) புகை வேண்டாம்,போதை வேண்டாம், மது வேண்டாம், மாமிசமும் வேண்டாம். இதற்கு துரிய தவம் உதவும் இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.


🌋 குறிப்பு:- இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🌋 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்


🌋 மேலும் விபரங்களுக்கு

Vethathiriyam for world peace

www.vethathiri.edu.in

https://facebook.com/skyyogatv


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments